வெங்காயம், வாழை, மஞ்சள் மற்றும் மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்புப் பருவத்தில் பயிரிடப்பட்டிருக்கும் வெங்காய பயிர்களுக்கு வருகிற 11-ஆம் தேதி வரையிலும், வாழை, மஞ்சள் மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரையிலும் காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதில் மரவள்ளிக்கிழங்கு 1, 385 ரூபாய் 60 பைசா, வாழை ஏக்கருக்கு 1, 842 ரூபாய் 62 பைசா, வெங்காயம் ஏக்கருக்கு 802 ரூபாய் 70 பைசா, மஞ்சள் ஏக்கருக்கு 1, 950 ரூபாய் 24 பைசா என விலை நிறைந்துள்ளனர்.
இதனை அடுத்து அரசு பொது இ-சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக காப்பீடு தொகையை செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். அதன்பின் காப்பீடு பதிவு செய்ய சீட்டா, ஆதார் அட்டை, நடப்பு பருவ அடங்கல் மற்றும் வங்கி பாஸ்புக் போன்றவற்றை கொண்டு வந்து பதிவு செய்யும் விவசாயின் பெயர், சர்வே எண், உட்பிரிவு, பயிரிடப்படும் நிலம் இருக்கும் கிராம விலாசம் ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மஞ்சள், வெங்காயம், வாழை மற்றும் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.