தற்போது 1,00,099 ரூபாய் நிதி தொகையை ஒதுக்கீடு செய்து புதிதாக ரோடு அமைக்கும் பணி நடைபெற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழாக 11-வது வார்டுக்கு உட்பட்ட பொய்குணம் சாலைப் பகுதியில் இருந்து பாலிடெக்னிக் கல்லூரி செல்லும் சாலை தொகுதி வரை ரோடு போடும் பணி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிய சாலைகள் அமைக்க 1,00,099 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட மூன்று சாலைகளில் ஜல்லி மற்றும் மண் கொட்டப்பட்டுள்ளது.
ஆனால் சட்டமன்றத் தேர்தல் காரணமாகவும், கொரோனா தொற்று காரணமாகவும் இரண்டு மாதங்கள் மேலாகி சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை என கூறப்படுகிறது. அதனால் சங்கராபுரம் பேரூராட்சி பகுதியில் ஆய்வு செய்தால் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மூன்று சாலைகளையும் அமைக்கும் பணியை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.