Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீவிரமாக நடைபெறும் தடுப்பூசி பணி…. சிறப்பாக பணியாற்றும் பணியாளர்கள்…. ஆட்சியரின் ஆய்வு….!!

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளை கலெக்டர் திடீரென ஆய்வு செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடும் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தின் நகராட்சி கொல்லிஸ் ரோடு உள்பட 5 பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

அதன்பின் தடுப்பூசி போடும் பணியில் மருத்துவ குழுவினருடன் இணைந்து பணியாற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் எத்தனை வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்ட பட்டியலின் படி தடுப்பூசி போட்டுக்கொள்தவர்களை அழைத்து அவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள டோக்கன் வழங்கிய விவரங்களை கேட்டறிந்துள்ளார்.

பின்னர் பணியாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு வாரியாக கட்டாயம் ஒவ்வொரு குழுவும் 200 நபர்கள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள நடவடிக்கையை பின்பற்றாமல் தன்னிச்சையாக பணியினை செய்து வந்த பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி பணியினை திறம்பட செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை தவறவிடாமல் கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இரண்டாவது தவணை தடுப்பூசி அடுத்த கட்டமாக அதேபோல மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்தப் பணியில் சுணக்கம் காண்பிக்க வேண்டாம் என கலெக்டர் கூறியுள்ளார். அதன் பிறகு இம்மாவட்டம் தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கி இருப்பதினால் அதை உணர்ந்து பணியாளர்கள் பணிகளை முறையாகச் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கவரத்தெரு உள்பட 4 பகுதிகளில் நர்சுகள் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் போது கலெக்டர் திடீரென அங்கு ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |