பருவமழை வருவதற்கு முன்பாக வாய்க்காலை தூர்வாரும் பணியை செய்ய அதை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தேரி வரத்து வாய்க்காலை இம்மாவட்டத்தின் கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பருவ மழைக்கு முன்பாக வாய்க்கால் தூர்வாரும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இதை சார்ந்த அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதில் சித்தேரியின் முகப்பு பகுதியில் இருக்கும் அடைப்புகளை அகற்றி ஏரிக்கு நீர் வரும் வழியை சரி செய்ய வேண்டும் என அலுவலர்களிடம் அவர் கூறியுள்ளார்.
அதன்பின் இங்கே சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் மதிப்பீடு குறித்த ஆய்வை மேற்கொண்டு அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து காந்தி ரோட்டில் உள்ள பெரிய ஏரி பாசன வாய்க்காலை ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை மற்றும் ஆக்கிரமிப்பு வரைபடம் போன்றவற்றை தயார் செய்து சமர்ப்பிக்கும்படி வருவாய் துறை அலுவலருக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.