அடுத்த 10 ஆண்டுகளில் கண்கவரும் மலர் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க உள்ளதாக கொலம்பிய அரசு அறிவித்துள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய மலர் ஏற்றுமதி செய்யும் நாடு கொலம்பியா. இங்கிருந்து கலர் கலராக கண்களை கவரும் வித விதமான ரோஜாக்கள், சாமந்தி என 1, 500-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த 66 கோடி பூக்கள் ஆண்டுதோறும் அமெரிக்கா, மெக்ஸிகோவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
காதலர் தினத்திற்கு இன்னும் இரண்டே நாட்கள் தான் இருக்கிறது. இந்ததினத்தையொட்டி மட்டும் 1, 000 கோடி ரூபாய்க்கு கொலம்பியா மலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் மேலும் ஆசியா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு விரிவுப்படுத்தும் நோக்கில் மலர் ஏற்றுமதியை ஆண்டுக்கு 21,000 கோடி ரூபாயாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் இவான் டியூக் தெரிவித்தார்.