திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, இன்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை மட்டும் வழி நடத்தவில்லை, ஒன்றிய அரசையும் சேர்த்து வழிநடத்தக்கூடிய ஒரு தகுதியைப் பெற்று இருப்பவர் தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அவர் காண்கின்ற கனவு, அந்த கனவை நியாயப்படுத்துகின்ற உண்மையாக கூடிய திறமை யாரிடம் இருக்கிறதோ அவருக்குத்தான் தலைமை பண்பு, அந்த தகுதி உண்டு என்று சொல்வார்கள்.
இன்றைக்கு தான் காணுகின்ற கனவாக இருந்தாலும், திராவிடத்தினுடைய கனவாக இருந்தாலும், பொதுமக்கள் எதற்கெல்லாம் ஏங்குகிறார்கள், அவர்களுடைய கனவு என்னவாக இருக்குமோ? அதையெல்லாம் சிந்தித்து அதற்கு ஒரு செயல்வடிவம் கொடுக்கிறார் அதுதான் நம்முடைய தலைவர் தளபதி அவர்கள். இங்கு எனக்கு முன்பு பேசிய நம்முடைய மாண்புமிகு அமைச்சர் சொன்னார். இவரை தம்பி என்று சொல்லலாம், நண்பர் என்று சொல்லலாம், அண்ணன் என்று சொல்லலாம் என்று சொன்னார்.
ஏன் ? உங்கள் பிள்ளை என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு உங்களுக்கு அந்த உரிமை உண்டு என்பதை பெருமையோடு சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் இருந்து மாநில இளைஞரணி உடைய துணை செயலாளராக அன்றைக்கு இளைஞரணியினுடைய செயலாளராக இருந்த நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய அந்த பணியில் நான் ஈடுபட்ட போது…
ஒவ்வொரு முறையும் அது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய பிறந்தநாளாக இருந்தாலும் சரி, நம்முடைய இயக்கத்தினுடைய தலைவர் தளபதியாருடைய பிறந்த நாளாக இருந்தாலும் சரி, தொடர்ந்து இதுபோன்ற பல மேடைகளில் பல தலைப்புகளை எங்களுக்கு எல்லாம் வழங்கி, எங்களை எல்லாம் இன்றைக்கு ஓரளவுக்கு பேசுவதற்கு காரணமாக விளங்கிக் கொண்டிருக்கின்ற எங்களுடைய ஆசிரியர் என்று கூட சொல்லலாம்…
ஆக அப்படிப்பட்ட அண்ணன் அவர்களுக்கு மீண்டும் இந்த ஆண்டும் அந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு என்னுடைய நன்றி என தெரிவித்தார். அமைச்சரின் இந்த பேச்சு திமுக தொண்டர்களை மகிழ்ச்சி அடைய வைத்ததோடு, டெல்லியை ஆளும் உற்சாக கனவு காண வைத்துள்ளது.