விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கொடிமா கிராமத்தில் வசித்து வருபவர் விஸ்வநாதன். கூலித் தொழிலாளியான இவருக்கும், மாலா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி விஷ்ணு, தமிழ்செல்வி மற்றும் விஜயலட்சுமி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில், விஸ்வநாதன் தான் வசித்து வருகின்ற நிலத்திற்கு பட்டா வழங்குமாறு கேட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளார்.. எனினும், கலெக்டர் அவருக்கு பட்டா வழங்கும் நிலத்தின் அளவு குறைவாக இருப்பதாகக் கூறி பட்டா வழங்க மறுத்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் இன்று குடும்பத்துடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த அவர் திடீரென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்குப் பணியிலிருந்த கலவத்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து விஸ்வநாதன் கூறுகையில், “அரசின் சலுகைகள் எனக்கு கிடைப்பதில்லை. அரை செண்ட்டுக்கும் குறைவாக பட்டா கொடுக்கின்றனர். என் வீடு விழுந்து போய்விட்டது.. நான் மாட்டு கொட்டகையில் ஒரு பகுதியில் இருக்கிறேன்.. எனக்கு முறையாக பட்டா வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.