டெஸ்லா நிறுவனத்தின் எஸ் வகை மின்சாரக் கார் ஓன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால், சீனாவிற்கு சிறப்புக் குழுவை அந்நிறுவனம் அனுப்பியுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் டெஸ்லா எஸ் மாடல் (Tesla Model S) கார் ஒன்று பார்க்கிங் செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்த வீடியோ சீனாவின் மிக பிரபலமான சமூக வலை தளமான வைபோவில் வேகமாக பரவியது. டெஸ்லா வகை கார்கள் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படும். ஆனால் டெஸ்லா வகைக் கார்களுக்கு நடந்த இந்த நிகழ்வு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்த சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார் தீப்பற்றி எரிந்தது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிறப்புக் குழுவை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தக் குழுவினர் உள்ளூர் அதிகாரிகளுடன் சேர்ந்து, கார் தீப்பற்றியதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்துவார்கள் என்று டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தின் 14 கார்கள் இதே போன்று தீடிரென தீப்பிடித்து எரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.