Categories
அரசியல்

70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாததை , 5 ஆண்டுகளில் பாஜக செய்துள்ளது…. மோடி பெருமிதம்…!!

ஆட்சி செய்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு  செய்ய முடியாததை, வெறும் 5 ஆண்டுகளில் பா.ஜ.க  அரசு செய்து சாதித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இதையடுத்து பிரதமர் மோடி தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , எல்லோருடனும் இணைந்து அனைவருக்கும் முன்னேற்றம் என்ற முறையில்  பிஜேபி கூட்டணி அரசு மீண்டும் உங்களின் ஆசியை நாடுகின்றது . ஆட்சி செய்த கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை, பாரதீய ஜனதா ஆட்சியில் நாங்கள் வெறும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றி சாதித்துள்ளோம். இப்போது  பலம்  பாதுகாப்பான இந்தியாவை உருவாக்கும் வாய்ப்பு வந்துள்ளது .

தற்போது நம் நாட்டால் பயங்கரவாதத்துக்கு சரியான பதிலடி கொடுக்க முடியும் , வறுமையை முற்றிலும் ஒழிக்க முடியும் ,  ஊழலை ஒழித்துக்கட்ட முடியும் , ஊழல்வாதிகளை தண்டிக்க முடியும் , 50 கோடி மக்களுக்கு தரமான, இலவச சிகிச்சை வசதியைப் கொடுக்க முடியும் , 42 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் பெற வழி பிறந்திருக்கிறது , 12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6 ஆயிரம் நிதி கிடைக்கிறது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில்  130 கோடி இந்திய மக்களின் ஆசிளோடு, இதற்கு முன்பு முடியாது என்று கருதப்பட்டதெல்லாம் இந்த ஆட்சியில் சாத்தியப்பட்டிருக்கிறது.

ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் தேர்தல் நடைபெறயுள்ளது. இந்த தேர்தலில் வரலாற்று சாதனையாக அதிகமானோர் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. முதல் முறையாக வாக்களிப்பவர்கள், சாதனை படைக்கிற வகையில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும்.
தேர்தல் கமிஷனுக்கு வாழ்த்துக்கள். பல ஆண்டு  காலமாக தேர்தல்களுக்கு முறையான  ஏற்பாடுகளை செய்த தேர்தல் கமிஷனை நினைத்து  இந்தியா பெருமைகொள்கிறது என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |