Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாஜகவை பதற வைத்த காங்கிரஸ்”…. பா. சிதம்பரத்தின் அதிரடி பதிவு….. அதிர்ச்சியில் உறைந்த மேலிடம்….!!!!!

இந்தியாவில் வேலையின்மை பிரச்சனைகள் தலை விரித்தாடுவதாக காங்கிரஸ் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி அடிக்கடி வேலையின்மை பிரச்சனை குறித்த செய்திகளை தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிடுவதுடன் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தும் வருகிறார். இந்தியாவில் கடந்த வாரத்தில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இது தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு வெறும் கண்துடைப்புக்காக செய்யப்பட்ட வேலை என்று அரசியல் கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இப்படி வேலையின்மை பிரச்சனை குறித்து பல்வேறு தரப்பினரும் பாஜகவை விமர்சித்து வருவதால் ஹிமாச்சல் பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் பெரும் தாக்கம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தி கிரேட் பணிக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா. சிதம்பரம் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, உத்திரபிரதேசத்தில் 37 லட்சம் பேர் கிரேட் சி வேலைகளுக்கு விண்ணப்பித்த பிறகு 40,000 அக்னி வீரர் வேலைகளுக்கு 35 லட்சம் விண்ணப்பதாரர்கள் உள்ளனர்.

நாங்கள் விரக்தியில் இருக்கிறோம் எங்களுக்கு வேறு வழியில்லை என்ற இளைஞர்களின் வேதனை குரலை அரசாங்கம் கேட்கிறதா?. 8 வருடங்களுக்குப் பிறகு மோடி அரசாங்கத்தின் பாரம்பரியம் இதுதான். வேலையில்லை  விகிதம் 8 சதவிகிதம் (பெரும் மாறுவேட வேலை வாய்ப்பின் காரணமாக இது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது). நிதி அமைச்சகத்தின் செப்டம்பர் மாதம் மதிப்பாய்வு வேலையின்மை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பாஜகவை விமர்சித்து வருகின்றனர். மேலும் பிரச்சினை குறித்து பல்வேறு தரப்பினரும் இணையதளத்தில் விமர்சனங்களை முன் வைப்பதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |