Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு உங்கள மாதிரி ஆள் தேவை – கம்பீருக்கு குவியும் பாராட்டு …!!

வடக்கு டெல்லியில் வன்முறைக்கு எதிராக கண்டனம் தெரிவித்த கம்பீரை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜீவ் சுக்லா வரவேற்றுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடக்கு டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை அரங்கேறியுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக போராடுகின்றவர்கள் போராட்டத்தை முடிக்கவில்லை என்றால் போலீஸ்க்கு கூட பயப்படாமல் நாங்கள் களமிறங்குவோம் , போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று பாஜகவின் கபில் மிஸ்ரா பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் போரட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக பேரணி நடத்திய இவர் அமெரிக்க அதிபர் இருக்கும் வரை நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம் , அவர் போனது பாருங்கள் என்று பேசியதோடு வன்முறையை தூண்டும் வகையில் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து தான் அங்கு இருதரப்பினரிடையே மோதல் வெடித்து வன்முறையாக மாறியது. இதில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். 160க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டுக்கடங்கா வன்முறையால் வடக்கு கிழக்கு டெல்லி பகுதயில் 144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வன்முறை சம்பவம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் , பாஜக சார்பில் வெற்றிபெற்ற டெல்லி கிழக்கு தொகுதி  மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர் கூறுகையில் , கபில் மிஸ்ராவின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல.வன்முறைக்கு தூண்டினால் காங்கிரஸ் , ஆம் ஆத்மி , பாஜக யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இது துரதிர்ஷ்டவசமானது.ஷாஹீன் பாக்  ஒரு அமைதியான எதிர்ப்பு. இதற்க்கு உரிமையுள்ளது. ஆனால் டிரம்ப் இங்கே இருக்கிறார், இங்கு வன்முறை போராட்டங்கள் நடக்கின்றன – இது நியாயமில்லை. கைகளில் கற்களை எடுப்பது நியாயமில்லை. ஒரு போலீசாருக்கு முன்னால் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் எப்படி நிற்க முடியும்?  என்று கம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதைதொடர்ந்து தான் கவுதம் கம்பீரை அனைவரும் பாராட்டி உள்ளனர். தவறு செய்தவர் பாஜகவை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தண்டிக்க படவேண்டும் என்று இதுவரை பாஜகவினர் சொல்லாத கருத்தை நியாயமாக கம்பீர் தெரிவித்துள்ளார். இதனால் நியாயத்தின் பக்கம் நின்று பாஜகவின் தலைவரை துணிச்சலுடன் கண்டித்துள்ளார்.

வன்முறைக்கு காரணமான கபில் மிஷ்ராவை கண்டித்ததற்காக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதனால் கவுதம் கம்பீர் என்ற பெயர் ட்வீட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது. கம்பீரின் கண்டனத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா  வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் , கவுதம் கம்பீர்  தனது அறிக்கை வரவேற்கத்தக்கது. பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் ஆத்திரமூட்டும் பேச்சுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அவர் ஒரு உண்மையான விளையாட்டு வீரரைப் போல பேசியுள்ளார். எங்களுக்கு கவுதம் கம்பீர் போன்ற தலைவர்கள் தேவை என்று கூறினார்.

Categories

Tech |