விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 100 நாட்களுக்கு போட்டியாளர்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். இதனால் செல்போன் கூட பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. பிக்பாஸ் ஷோ இறுதிக்கட்டத்தை நெருங்கும் நேரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டுக்குள் வந்து சந்திப்பார்கள்.
அதுவரை 100 நாட்களுக்கு போட்டியாளர்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருப்பதோடு தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் பார்க்காமல் தான் இருக்க வேண்டும். இதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கியமான விதிமுறை.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளரான மணிகண்டனின் ஷூவில் தற்போது ப்ளூடூத் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக அவருடைய ஷூவை வாங்கி தற்போது பரிசோதனை செய்வதற்காக பிக்பாஸ் எடுத்துச் சென்றுள்ளது. மேலும் இது தொடர்பாக மைனா நந்தினி பேசியிருக்கும் வீடியோ தற்போது 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சி ப்ரோமோவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
https://twitter.com/BBFollower7/status/1592371480587038721?s=20&t=dME66kvg9KLh_AFqCvbjAA