தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டதில், தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,477 பேராக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 40,876 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன 21,381 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 20 பேர் அரசு முகாமிலும் கண்காணிப்பில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.
அதே போல சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் 4 பேர், சிகிச்சை அளித்து வந்த 4 மருத்துவர்கள், பத்தாம் வகுப்பு மாணவன் என ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. மக்களுக்காக கொரோனவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள் 4 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை தூக்கி வாரி போட்டுள்ளது.