Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை சவக்குழியில் வீசிச்சென்ற சம்பவம்… விளக்கம் கேட்டு ஆட்சியர் நோட்டீஸ்!

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ததில் அலட்சியம் காட்டிய விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அளித்துள்ளார்.

அலட்சியம் கட்டிய விவகாரத்தில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், மருத்துவ கண்காணிப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் புதுச்சேரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது கரோனாவால் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு கோபாலன்கடை மயானத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு கவச உடை அணிந்த பணியாளர்கள் நனைத்து பேர், ஆம்புலன்ஸில் இருந்து உடலை தூக்கி வந்தனர். அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த குழி அருகே வந்த போது, குழிக்குள் சடலத்தை கயிறு கட்டி இறக்காமல் சடலத்தை வீசி விட்டு சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவாக இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Categories

Tech |