Categories
மாநில செய்திகள்

“நம்மள பாத்து உலக நாடுகள் பயப்படுறாங்க”…. இனி இந்த 2 விஷயத்துக்கு குறைவே இருக்காது…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சனாரி பகுதியில் ரத்தினம் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழா ‌ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இந்நிலையில் நிகழ்ச்சியின் போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து உருவான 10 முக்கிய பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் சமச்சீர் கல்வி முதல் அனைத்து வகையான கல்வி களுக்கும் வளர்ச்சிக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தற்போதுள்ள இளைஞர்கள் சமுதாயத்தின் வளர்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்கள்.

இளைஞர்களின் படிப்புக்கு ஏற்ப அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவது தான் திராவிட மாடலின் முக்கிய கடமை. தமிழகத்தில் உங்களுக்கு தற்போது முதல்வராக மு.க ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார்கள். அரசு பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் கிடையாது. பெருமையின் அடையாளமாக தான் திகழ்கிறது. அரசு பள்ளி பாடத்திட்டங்களை சார்ந்தே சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டங்கள் அமைந்துள்ளது.

முதல்வர் படிப்பு மற்றும் மருத்துவம் இரண்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மற்ற நாடுகள் எல்லாம் நம் இந்தியாவை பார்த்து பயப்படுகிறது. அந்த பயத்திற்கு காரணம் ஆயுதங்கள் கிடையாது. நம்மிடம் இருக்கும் இளைய சமுதாயத்தினர் மட்டும்தான். இளைய சமுதாயத்தை பார்த்து தான் அச்சப்படுகிறார்கள். மேலும் நாம் எப்போதும் பிற்போக்குவாதிகளை விட வேகமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |