தென் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ஸ்வாசிலாந்து நாடு, உலகளவில் வறுமை விகிதத்தில் அதிகம் பாதிக்கப்பட்டு காணப்படுகிறது. அதன் அரசர் மிஸ்வாட்டி 3, தனது மனைவிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக சுமார். ரூ 175 கோடி மதிப்புள்ள 19 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பரிசாக அளித்து உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளார்.
இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஸ்வாசிலாந்து நாட்டிற்கு 4 ட்ரக்குகளில் வந்திறங்கியுள்ளது. இதைப் பார்த்த மக்கள், வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் நாட்டை முன்னேற்றாமல், இப்படி செய்கிறாரே என வருத்தம் தெரிவிப்பதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் தான், தன்னுடைய 23 பிள்ளைகளுக்கு 20 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள், 62 Maybach கார்கள், ஒரு பிஎம்டபிள்யூ கார் எனப் பரிசளித்தார், அரசர். இதனிடையே அதேபோல், அவர் பயணிப்பதற்குத் தனியாக விமானம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Unconfirmed reports suggest that it was 4 trucks loaded with 20 Rolls Royce and one Rolls Royce Cullinan pic.twitter.com/lgQSpdurmY
— Mzilikazi wa Afrika (@IamMzilikazi) October 30, 2019