சென்னை போரூரில் ஏசியில் தீ பிடித்ததால் புகை மூட்டத்தில் சிக்கிய தம்பதியினருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை போரூரில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக ஏசியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கிய தம்பதியினருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தம்பதியினரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்களின் இரண்டு மகன்கள் எந்த வித காயமுமின்றி உயிர்தப்பினர்.
ஏற்கனவே சென்னை தாம்பரத்தில் பிரிட்ஜ் வெடித்ததில், நன்கு உறங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நியூஸ் ஜே தனியார் தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் பிரசன்னா, மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.