Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணமாகி 2 மாதத்தில் ஒரே கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்கிய தம்பதி….. காரணம் என்ன….? தூத்துக்குடியில் பகீர்…!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் அருகே தருவை குளத்தில் ஏ.எம் பட்டி பகுதி அமைந்துள்ளது.‌ இந்த பகுதியில் தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்க்கும் தங்க முனியசாமி (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துவாரந்தை பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மாதங்கள் ஆகும் நிலையில், அடிக்கடி கணவன்-மனைவி 2 பேரும் சண்டை போட்டுள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மீண்டும் சண்டை போட்டுள்ள நிலையில் மறுநாள் காலை வெகுநேரமாகியும் வீட்டின் கதவை திறக்காமல் இருந்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தருவைகுளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 2 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும்‌ திருமணம் ஆகி 2 மாதத்தில் கணவன் மனைவி இரண்டு பேரும் ஒரே கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்கியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |