மங்கோலியா அருகே உடல் வலிமைக்காக அணிலை உண்ட தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நம்மில் பலபேர் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றோம். நம்முடன் நெருங்கியவர்கள், நண்பர்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க ஏதாவது டிப்ஸ் கொடுத்தால் அதன் படி செய்வோம். அதே போல் மங்கோலியா நாட்டில் வசிக்கும் மக்களில் சிலர் உடல் வலிமையடைய அணிலை சமைக்காமல் பச்சையாக சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கையுடையவர்கள். மங்கோலியா மற்றும் ரஷ்யாவின் எல்லை பகுதியில் சகானூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் சென்ற வாரம் உடல் வலிமைக்காக மர்மூத் என்ற அணில் வகையை பச்சையாக சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு உடல் சோர்வுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இருவரும் உடல் நிலை சரில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். மருத்துவமனையில் இருவரையும் பரிசோதித்ததில் இவர்களுக்கு பிளேக் நோய் உள்ளது என்று தெரியவந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த நபர் முதலில் மரணமடைந்தார். பின் சிகிச்சை பலனின்றி மனைவியும் கடந்த மே 1_ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.