Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

விஷாலின் மனு மீதான விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம் …!!

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நடிகர் விஷாலின் மனு  விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தது உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் 23_ஆம் தேதி நடிகர் SV சேகர் நாடகம் நடத்துவதால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

காவல்துறையும் நடிகர் சங்கத்தேர்தலுக்கு எங்களால் போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என்று அறிவித்ததையடுத்து பஞ்சபாண்டவர் அணி சார்பில் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்ந்தார் .இந்த வழக்கில் நடிகர் சங்க தேர்தலை  எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது இதன் விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தது உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.ஏற்கனவே நடிகர் சங்க தேர்தலை நடத்த தென்சென்னை மாவட்ட சங்ககளின் பதிவாளர் அலுவககம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |