ஜெர்மனியில் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த 11 இளைஞர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
ஜெர்மனியில் இளம் பெண் ஒருவருக்கு குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்த இளைஞர்கள் இரண்டு மணி நேரம் மாறி மாறி வன்கொடுமை செய்துள்ளனர். போதை மயக்கத்தில் இருந்த பெண் தனக்கு நடக்கும் அநீதியை தடுக்கவும் முடியவில்லை. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கு நீதிமன்ற தீர்ப்பு வந்த நிலையில் விருப்பப்பட்டுதான் அந்த பெண் தங்களுடன் வந்ததாக நீதிமன்றத்தில் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது குற்றச்செயலில் ஈடுபட்ட பதினோரு இளைஞர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளிக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்ற 7 இளைஞர்களுக்கு மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவ மறுத்த இரண்டு பேருக்கு 4 மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மற்றொருவர் குற்றத்தில் ஈடுபடவில்லை என கூறி விடுவிக்கப்பட்டுள்ளார்