Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வட்டி கொடுக்க வந்த பெண்… நாசம் செய்து வீடியோ எடுத்த நிதி நிறுவன அதிபர்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

வட்டி பணம் கொடுக்க வந்த பெண்ணை நாசம் செய்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட தனியார் நிதி நிறுவன அதிபருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் தன்னுடைய குடும்ப செலவுகளுக்காக அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபரான சிவக்குமார் என்பவனிடம் கடந்த 2009ஆம் ஆண்டு கடன் வாங்கியுள்ளார்.. இதற்கான வட்டி தொகையையும் மாதம்தோறும் கரெக்ட்டாக செலுத்தி வந்துள்ளார் அந்தப்பெண்.

அதனைத்தொடர்ந்து 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வட்டி தொகையை செலுத்துவதற்கு அந்தபெண் செல்ல முடியாத நிலையில், தன்னுடைய 19 வயது மகளிடம் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார்.. நிதி நிறுவனத்துக்கு சென்று அவர் பணத்தை கொடுத்த போது, அந்த பெண்ணை சிவகுமாரும், அவனது நண்பரான ஆமையன் ரவி என்பவனும் வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்..

இந்த சம்பவம் பற்றி அந்த பெண் தன்னுடைய தாயாரிடம் அழுதபடியே கூறியுள்ளார்.. பின்னர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் அவர்கள் புகாரளித்தனர்.. புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த வழக்கு நாமக்கல் சிபிசிஐடி போலீசாருக்கு  மாற்றப்பட்டு வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் 2ஆம் குற்றவாளியான ஆமையன் ரவி என்பவன் உயிரிழந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.. இதில், நிதி நிறுவன அதிபர் சிவகுமாருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 13 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |