கிரிமினல் வழக்குகளை கையாள்வதை அலகாபாத் நீதிமன்றம் சிஸ்டம் செயலிழந்து விட்டது என்று உச்சநீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை அமர்வில் அலகாபாத் உயர்நீதிமன்றம் செயல்பாடு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. மேலும் அலகாபாத் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. அதாவது 20 வருடங்களுக்கு மேலாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை சரியாக கையாளவில்லை என்று எங்களால் பார்க்க முடிகிறது. இது தொடர்பாக பதில் அளியுங்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சிஸ்டம் சரியில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக எப்படி கிரிமினல் வழக்குகளை கையாண்டிருக்கிறார் என்பது தொடர்பாக கூறுவதற்கு ஜொலிஸ்டர் ஜென்ரல் துஷார் மேத்தா , டெல்லி நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் உதவியையும் உச்சநீதிமன்றம் நாட இருக்கின்றது.
20 ஆண்டுகளுக்கு மேலாக கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் இந்த கருத்தை முன்வைத்துள்ளது. அலகாபாத் நீதிமன்றம் வழக்குகளை விரைந்து விசாரிப்பதில் கால தாமதம் ஏன் என விளக்கம் அளிக்குமாறு அலகாபாத் உயர்நீதி மன்றத்திற்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.