Categories
சினிமா தமிழ் சினிமா

“மோகன்லால் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்”…. செய்வதறியாது தவிக்கும் படக்குழு….!!!!!

மோகன்லால் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் படக்குழு குழப்பத்தில் உள்ளார்கள்.

மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் மோகன்லால். இவர் தற்போது மான்ஸ்டர் என்ற புதிய திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்தில் லட்சுமி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றார்கள். இயக்குனர் வைஷாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கேரளாவில் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு மூன்று நாட்களுக்கு முடிந்திருக்கின்றது.

இந்த நிலையில் இந்த படத்தை வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. மான்ஸ்டர் படத்தை அந்த நாடுகளின் தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பி வைத்தார்கள். படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் திரையிட மறுத்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. இதனால் சர்ச்சைக்குரிய காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு மீண்டும் வளைகுடா நாடுகளின் தணிக்கை குழுவுக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டு இருக்கின்றது என சொல்லப்படுகின்றது. இதனால் படம் நாளை வளைகுடா நாடுகளில் வெளியாகாமல் போகலாம் என கூறப்படுகிறது.

Categories

Tech |