Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

கொரோனா நிவாரணம் : BCCI ரூ 51,00,00,000 வழங்குவதாக அறிவிப்பு!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 51 கோடி வழங்குவதாக தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. 900க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

BCCI to donate Rs 51 crore to Prime Minister's CARES Fund to help ...

இந்நிலையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தனது ட்விட்டர் பக்கத்தில் ரூ 51 கோடி நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், 25 கோடியும், டாட்டா அறக்கட்டளை சார்பில் 500 கோடியும், டாடா சன்ஸ் குழுமம் சார்பில் 1000 கோடி ரூபாயும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Account : PM CARES, Ac No 2121PM20202, IFSC: SBIN0000691 -இல் நிதியுதவி அளிக்கலாம். SWIFT Code : SBININBB104 – இல் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நிதியுதவி வழங்கலாம். Name of Bank&Branch : State Bank of India, New Delhi Branch, UPI ID: pmcares@sbi – இதில் பொதுமக்கள் வழங்கும் சிறிய அளவிலான நிதியும் ஏற்றுக் கொள்ளப்படும். பேரிடர்களின் போது மக்களை காக்க இதுபோன்ற நிதியுதவிகள் உதவும் என்று மோடி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |