Categories
தேசிய செய்திகள்

செய்யாத குற்றம் “20 ஆண்டுகள் சிறை தண்டனை” இளைஞரின் வேதனை..!!

ஒடிசாவில் செய்யாத குற்றத்திற்காக  20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இளைஞர் போதிய ஆதாரமின்றி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.  

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் கண்ட கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 1997 ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு  கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் மாயமாகி இருந்தன. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அதே கிராமத்தை சேர்ந்த சாதுபிரதான் என்பவனை கைது செய்தனர். பின்னர் விசாரணை உச்ச நீதிமன்றம் கடந்த 1999-ஆம் ஆண்டு அவருக்கு தண்டனை கொடுத்து சிறையில் அடைத்தது.

Image result for Court of Odisha

இதையடுத்து சாது  பிரதான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிப்பதா என்று விரக்தியில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அன்று  மேல்முறையீடு செய்தது தான் அதன் மீதான விசாரணை இழுத்தடித்துக் கொண்டே வந்து இறுதியில்  20 வருடங்கள் ஆனது. இதனால் பாதி வாழ்க்கையை அவர் சிறையிலேயே கழித்து விட்டார் என்பது தான் வேதனை. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த திங்கட்கிழமை வெளியானது. அதில் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தால்  சாதுவை விடுதலை செய்வதாக  நீதிமன்றம் உத்தரவிட்டது.

Categories

Tech |