Categories
தேசிய செய்திகள்

முதலையை கொன்று… துண்டு துண்டாக வெட்டி ருசி பார்த்த கிராமத்தினர்… வனத்துறையினர் அதிர்ச்சி..!!

முதலையை கொன்றது மட்டுமில்லாமல், அதனை சமைத்து சாப்பிட்ட கிராம மக்களிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒடிசா மாநிலம், மல்கன்கிரி மாவட்டத்திலுள்ள கலாடப்பள்ளி என்ற கிராமத்தில் சபேரி என்ற ஆறு செல்கின்றது.. இந்த ஆற்றில் இருந்து 5 அடி நீளமுடைய முதலை ஒன்று நேற்று வெளியேறியது. இதனை கண்ட அந்த கிராம மக்கள், சிறிதும் பயமில்லாமல் முதலையென்றும் பாராமல், மீனின் செதிலை உரிப்பது போல உரித்து, அதன் கை மற்றும் கால்களை வெட்டினார்கள்.

அதைத் தொடர்ந்து முதலையின் தலை, உடல், என தனித்தனியாக எடுத்து துண்டு துண்டாக வெட்டி அதன் இறைச்சியை மக்கள் ஆளாளுக்கு பங்கு போட்டு கொண்டனர்.. அதன் பின்னர் வீட்டுக்கு எடுத்து சென்று அதனை சமைத்து ருசித்து சாப்பிட்டனர்.

இந்தத் தகவல் வனத்துறையினருக்கு தெரியவர, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட கிராம மக்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் பிரதீப் மிராஸ் கூறுகையில், “முதலை கொல்லப்பட்ட தகவல் கிடைத்தவுடனேயே அந்த கிராமத்திற்கு விரைந்து சென்றோம்.. ஆனால் எங்களுக்கு அங்கு எதுவும் கிடைக்கவில்லை. இது குறித்து விசாரிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

Categories

Tech |