தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, சங்கீதா, மீனா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு வாரிசு திரைப்படத்துடன் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இதனால் தற்போது இருந்தே விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே மோதல் நிலவியுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயை காண்பதற்காக ரசிகர்கள் பலரும் குவிந்துள்ளனர். அப்போது நடிகர் விஜய் ரசிகர்களை பார்த்து கையசைத்து விட்டு கேரவனுக்குள் செல்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.