Categories
சினிமா தமிழ் சினிமா

“அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி இன்பம் காண்கிறது கொடூர உலகம்” நயன்-விக்கி விவகாரத்தில் ரேஷ்மாவின் அதிரடி பதிவு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார். கடந்த 7 வருடங்களாக காதலித்த நயன்-விக்கி ஜோடி கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியதிலிருந்து பல்வேறு விதமான சர்ச்சைகள் வெடித்துள்ளது. இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு தற்போது பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா ஆதரவு கொடுத்துள்ளார். இவர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக டுவீட் பதிவு செய்துள்ளார்.

அதில் இந்த உலகில் அடுத்தவர்களுக்காக சந்தோஷப்படுவது இல்லை. விளாசுவது, யூகிப்பது, குற்றம் சாட்டுவது, அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி இன்பம் காண்பது. இதுதான் தற்போதைய கொடூர உலகில் நடந்து கொண்டிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்காக தான் ரேஷ்மா தெரிவித்துள்ளார் என ரசிகர்கள் கூறிவரும் நிலையில், வனிதாவும் ரேஷ்மா கூறியது மிகச்சரியானது என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கோபிக்கு மனைவியாக நடித்து வருவதால் ரேஷ்மாவின் பதிவு அவருக்கும் பொருந்தும் என ரசிகர்கள் விளாசி வருகிறார்கள்.

Categories

Tech |