Categories
உலக செய்திகள்

“வறுமையின் கொடுமை” 1 இல்ல 5 குழந்தைகளை…. கால்வாயில் வீசிய அப்பா…. விபரீத முடிவு…!!

தந்தை ஒருவர் வறுமையின் காரணமாக தன்னுடைய 5 குழந்தைகளை கால்வாயில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டம் படோகி பகுதியில் வசிப்பவர் முகமது இப்ராகிம். இவருக்கு நடியா (7), ஜைன் (5), ஃபிசா (4), தஷா (3) மற்றும் அகமது (1) என மொத்தம் 5 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் இப்ராகிம்க்கு கடந்த சில தினங்களாக வேலை கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் போதிய வருமானம் இல்லாமல் அவரது குடும்பம் வறுமையால் திணறியுள்ளது. இதனால், முகமது மற்றும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று மீண்டும் வறுமை காரணமாக முகமதுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முகமதுவின் மனைவி சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மனைவியுடனான வாக்குவாதத்தால் கோபமடைந்த முகமது தனது 5 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள கால்வாய்க்கு சென்றுள்ளார். தன்னுடைய கஷ்டம் மற்றும் மனைவியின் மீது இருந்த கோபத்தில் தனது 5 குழந்தைகளையும் முகமது கால்வாய்க்குள் வீசியுள்ளார்.

இதையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற முகமதுவின் மனைவி சிறிது நேரத்தில் வீட்டில் வந்து பார்த்தபோது கணவர் மற்றும் குழந்தைகளை காணவில்லை என்பதால் சந்தேகமடைந்து அருகில் உள்ள கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கணவர் குழந்தைகளை கால்வாய்க்குள் வீசிவிட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கால்வாய்க்குள் வீசப்பட்ட 5 குழந்தைகளையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு குழந்தைகளின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மற்ற குழந்தைகளின் நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை. இதையடுத்து, முகமதுவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |