பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இலங்கையைச் சேர்ந்த குற்றவாளியை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 1999ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் சந்திரிக பண்டாரநாயகா கொழும்பு நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார். அந்தப் பேரணியில் பெண் விடுதலைப்புலி தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய சிம்புலா அலே குணா என்பவர் இந்தியாவிற்குத் தப்பித்து வந்துள்ளார்.
மேலும் அவர் மீது போதைப்பொருள் கடத்தல் புகார்களும் உள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளாக தலைமைறைவாக இருந்த சிம்புலா அலே குணாவை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளியை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கிறது.