Categories
தேசிய செய்திகள்

“கள்ள சாராய வழக்கு” 25 பேரை கொன்ற குற்றவாளி… சென்னையில் அதிரடி கைது….!!

மத்திய பிரதேசத்தில் முகேஷ் கிரார் என்பவர் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்த 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் மான்பூர், பஹாவாலி கிராமத்தை சேர்ந்தவர்கள் பலருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததால் தான் இவர்கள் அனைவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள்.

அதன் பிறகு காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் இவர்களுக்கெல்லாம் முகேஷ் கிரார்  என்பவர்தான் கள்ளச்சாராயம் தந்துள்ளார் என்பது தெரியவந்தது. அதன்பிறகு குற்றவாளியான முகேஷ் கிராரை காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், அவர் சென்னையில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. தகவலின்பேரில் சென்னைக்கு வந்த மத்திய பிரதேச காவல்துறையினர், முகேஷ் கிராரை நேற்று கைது செய்தனர்.

Categories

Tech |