Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஒடிசாவில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு!

ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது .

ஒடிசா மாநிலத்தில் இதுவரை கொரோனவால் 42 பேர் மட்டுமே  பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். இந்நிலையில்  ஒடிசா மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று அம்மாநில தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்றது. இதில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இம்மாத இறுதிவரை, அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க போவதாகவும், தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதன்  மூலம் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என அந்த வீடியோவில் முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கல்வி நிலையங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் ஜூன் மாதம் 17 ஆம் தேதி வரை முழுமையாக மூடப்பட்டிருக்கும் என்றும், கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பிறகு தான்  மீண்டும் திறக்கப்படும் என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்

ஏற்கனவே ஒடிஷா மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சொல்லப்போனால் இந்தியாவில் மிகவும் அதிகமான முறையில் அதிகமான நலத்திட்டங்களை கொண்டு வந்த மாநிலம்  என்ற பாராட்டை பெற்றுள்ளது. தற்போது நாடு முழுவதும்  ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் இருக்கக்கூடிய நிலையில்  ஒடிசா மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் இந்தியாவிலேயே ஊரடங்கை நீட்டித்த முதல் மாநிலமானது ஒடிசா. ஏற்கனவே பஞ்சாப் அரசு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து பின் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |