Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,45,380ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் கொரோனா தொற்று பரவல் குறையும் என அரசு கூறியது, ஆனால் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என கூறியுள்ளார்.

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உலகளவில் இந்தியாவில் தான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளித்து வருவது தவறான முன்னுதாரணமாக உள்ளது. ஊரடங்கு தளர்வால் ஏற்படும் விளைவுகளை நாம் சந்தித்து வருகிறோம்.

ஊரடங்கிற்கான நோக்கம் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது என அவர் கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என குற்றம் சாட்டியுள்ள அவர், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசின் உதவி பெறாமல் கொரோனோவை எதிர்த்து போராடி வருகின்றனர் என தெரிவித்துள்ளார். நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் புலம் பெயந்த தொழிலாளர்களுக்கு உதவ மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |