சைகோவ்-டி தடுப்பூசி கொரோனா மற்றும் டெல்டா வைரஸ்க்கு எதிராக 66% செயல்திறன் கொண்டது என சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது..
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வேகமாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது.. இந்த நிலையில் ஸைடஸ் கேடிலா நிறுவனத்தின் ZyCoV-D என்ற கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது இந்திய மருத்துவ தரக்கட்டுப்பாட்டு ஆணையம்.. அவசரகால பயன்பாட்டிற்காக நேற்று இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உலகிலேயே இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் டிஎன்ஏ தடுப்பூசி (ZyCoV-D) இதுவாகும்.
இந்த நிலையில் சைடஸ் கேடிலா நிறுவனம் கூறியதாவது, சைகோவ்-டி தடுப்பூசி கொரோனா மற்றும் டெல்டா வைரஸ்க்கு எதிராக 66% செயல்திறன் கொண்டது. செப்டம்பர் மாதம் முதல் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படும். அக்டோபர் முதல் மாதந்தோறும் 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது..