Categories
மாவட்ட செய்திகள்

போதிய வரத்து இல்லாததினால்… இதுக்காக தான் காத்துக்கொண்டிருக்கிறோம்… விவசாயிகளின் பரிதாப நிலை…!!

அணையில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் விவசாய பொதுமக்கள்பருவ மழை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பள்ளியில் அமைந்திருக்கும் சின்னாறு அணை மூலமாக 11 பகுதிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்துள்ளனர். இதன் மூலம் இம்மாவட்டத்தின் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இவற்றிற்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அணையிலிருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இந்நிலையில் சின்னாறு மூலமாக 4,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி செய்து வருகின்றனர்.

இதனையடுத்து இம்மாவட்ட பகுதிளில் குடிநீர்கான ஆதாரமாக விளங்கும் இந்த அணை சென்ற 2 ஆண்டுகளுக்கு மேலாக மழை இல்லாத காரணத்தினால் தண்ணீரின்றி காணப்படுகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கான அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அணையை நம்பி உள்ள ஏராளமான விவசாய நிலங்கள் தற்போது வானம் பார்த்த பூமியாக மாறிவிட்டது. மேலும் பருவமழை தொடங்கியனால் மட்டும் சின்னாறு அணைக்கு தண்ணீர் வரும் என்பதால் விவசாயிகள் அனைவரும் மழையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |