வருண் தவான், ஸ்ரத்தா கபூர், பிரபு தேவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஸ்ட்ரீட் டான்ஸர்’. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி அதகளம் செய்தது. இதற்கு முன்பாக ஸ்ரத்தா கபூர் நடித்த ‘ஏபிசிடி- 2’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அதன் அடுத்த பாகமான ‘ஸ்ட்ரீட் டான்ஸர்’ படத்திற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
இப்படத்தின் இல்லீகல் வெப்பன் 2.0 என்னும் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து இப்பாடலை யூடியூப் பார்த்த யூ ட்யூப் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஏகபோகத்துக்கும் எகிறவே படக்குழு ஆச்சரியத்தில் திண்டாடி போயிருக்கிறது.
இப்பாடல் ரிலீஸாவதற்கு முன்பே படத்தின் நாயகியான ஸ்ரத்தா கபூர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். தற்போது பாடலின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 75 மில்லியனைத் தாண்டவே சந்தோஷத்தை கட்டுப்படுத்தமுடியாத ஸ்ரத்தா, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு எடுத்துச்சென்று ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார். அப்பதிவில் இல்லீகல் வெப்பன் 2.0 பாடலின் காட்சி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/B7fxpf4JSTn/?utm_source=ig_web_button_share_sheet