Categories
உலக செய்திகள்

அச்சத்தை போக்க… கொரோனா வைரஸாக மாறி டான்ஸ்… அசத்திய குழந்தைகள்!

மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் போல உடையணிந்து பள்ளி மாணவிகள் ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில்  வைரலாகியுள்ளது.

சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சத்தில் உறையவைத்துள்ளது கொரோனா. கொரோனாவின் கோரப்பிடியில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளது. இதுவரையில் சீனாவில் 3200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பலியானோரின் 4962 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். தற்போது சீனா கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.

ஆனால் சீனாவுக்கு அடுத்து இத்தாலியில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டது. மேலும் ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின், தென் கொரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்து அதிக பாதிப்புகளை கொண்டுள்ளது. இதனால் உலக மக்கள் அனைவரும் பீதியில் உறைந்து இருக்கின்றனர். உலக நாடுகள் அனைத்துமே கொடிய கோரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் மெக்சிகோவில் ஒகாம்போ (Ocampo) 2020 என்ற பெயரில் நடைபெற்ற திருவிழாவில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நோய் பரவல் குறித்த அச்சத்தை போக்கும் விதமாகவும் சுகாதார த்துறை அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், டாக்டர் மற்றும் செவிலியர் உடையணிந்த குழந்தைகள் கொரோனா வைரஸ் போன்று வேடமிட்டிருந்த குழந்தையைச் சுற்றி நடனமாடி, நோய் தடுப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |