Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: ஆபத்து நீங்கியது…. செம்மையான ஹேப்பி நியூஸ்…!!

புரெவி புயலானது பாம்பன் அருகே மெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது  வலுவிழந்து இருப்பதாக அமைச்சர் ஆர் வி உதயகுமார் தென்காசியில் செய்தியாளர் சந்திக்கும்போது சொல்லியுள்ளார். அவ்வாறாக வலுவிழக்கும் பட்சத்தில் காற்றின் வேகம் குறையும். புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், அதிகபட்சமாக 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று சொல்லப்படுகின்றது.

புரெவி புயல் இன்னும் அருகே வரும் போதும் அதன் வேகம் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும்,  தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது. முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி புரெவி புயல் 16 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |