Categories
சென்னை மாநில செய்திகள்

“வடகிழக்கு பருவமழை தொடக்கம்” சென்னைக்கு நெருங்கும் ஆபத்து…… பீதியில் சென்னை வாசிகள்….!!

வடகிழக்கு  பரவுமழையால் சென்னையில்  வெள்ளம் சூழும் அபாயம் இருப்பதால் சென்னை வாசிகள் அச்சத்தில் உள்ளனர். 

சென்னை வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும் சென்னை தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் நள்ளிரவு முதல் சென்னை விமான நிலையம், குரோம்பேட்டை, ஆவடி, அம்பத்தூர், வளசரவாக்கம், வடபழனி, உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது.ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து விட்டது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலை  இன்று சென்னை வாசிகள் சந்தித்தனர்.

Image result for சென்னையில் வெள்ளம்

ஒரு நாள் பெய்த மழைக்கே முட்டி அளவு தண்ணீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்த நிலையில், இனி வரக்கூடிய காலங்களில் தொடர் மழையால் சென்னை எப்படிப்பட்ட சூழ்நிலையை சந்திக்கும் என்று யூகிக்க கூட முடியவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் வருதா புயல் உள்ளிட்ட புயல்களால் இயற்கை சீற்றங்களால் சென்னை கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் அமைந்து விடக் கூடாது என்ற அச்சத்தில் சென்னைவாசிகள் திகழ்ந்து வருகின்றனர். ஒருபுறம் பருவமழை தொடங்கியது மகிழ்ச்சி ஏற்படுத்தினாலும்,  மறுபுறம் வெள்ள அபாயம் ஏற்படும் சூழல் உள்ளதால் அச்சத்தில் உள்ளனர் சென்னைவாசிகள்.

Categories

Tech |