பிரபல நடிகரின் மகள் துணிச்சலாக பாம்பை பிடித்து பத்திரமாக வெளியில் விட்டு பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண்பாண்டியன். தற்போது இவரது மகளான கீர்த்தி பாண்டியன் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தும்பா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கீர்த்தி பாண்டியன் தற்போது ரீமேக் படமான ஹெலனின் நடித்து வருகின்றார்.
ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் தடைப்பட்ட நிலையில் கீர்த்தி பாண்டியன் தனது சொந்த ஊருக்கு சென்று விவசாய பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில் பாம்பு ஒன்று தனது வீட்டிற்குள் வந்ததை கண்டு சிறிதும் பயம் கொள்ளாமல் துணிச்சலாக அதனைப் பிடித்த கீர்த்தி பாண்டியன் பக்கெட் ஒன்றில் போட்டு வெளியே எடுத்து கொண்டு போய் விட்டுள்ளார்.