தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் என்னுடைய 17 வயது தங்கை வீட்டில் நீண்ட நேரமாக போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த என்னுடைய வளர்ப்பு தந்தை என் தங்கையை கண்டித்ததோடு அவளை கண்மூடித்தனமாக தாக்கினார். இதனால் என் தங்கைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. நான் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.
அங்கு என் தங்கையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். எனவே என்னுடைய தங்கையை கொலை செய்த என் வளர்ப்பு தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவியின் வளர்ப்பு தந்தையை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.