காதலித்ததால் பெண்ணின் பெற்றோர்கள் கோபமடைந்து சித்திரவதை செய்து மொட்டை அடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள பெசன்கான் நகரத்தில் கிறிஸ்துவ இளைஞரை காதலிப்பதால் முஸ்லீம் பெண்ணின் தலையை மொட்டையடித்து கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜெனரல்ட் தர்மன் இச்செயலுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு பெற்றோரும், உறவினர்களும் சட்டத்திற்கு உட்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த இளம்பெண் தற்போது பிரான்ஸ் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. போஸ்னியா வைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் செர்பியாவை சேர்ந்த 20 வயது இளைஞனிடம் கடந்த சில மாதங்களாக நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இவர்களின் பழக்கவழக்கங்கள் இரு குடும்பத்தாருக்கும் தெரியும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் மொபைல் போனை கைப்பற்றியதுடன் அந்த இளைஞனை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கண்டித்துள்ளனர். இந்நிலையில் காதலர்கள் இருவரும் திடீரென காணாமல் சென்று விட்டனர். நான்கு நாட்களுக்கு பிறகு இல்லம் திரும்பியுள்ளனர். இச்சம்பவத்தால் கோபமடைந்த பெண்ணின் பெற்றோர்கள் அப்பெண்ணை கடுமையாக தாக்கி தலையை மொட்டையடித்ததாக கூறப்படுகிறது. இதனை இளைஞனின் பெற்றோர்கள் காவல்துறையினரிடம் தெரியப்படுத்தியுள்ளனர். இளம் பெண்ணின் தலையை காதல் விவகாரத்திற்காக மொட்டையடித்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.