தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழாவின் போது மணமகன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் நிஜாமாபாத் நகரை சேர்ந்த கணேஷ்(24) என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அதன் பின்னர் நடைபெற்ற ஊர்வலத்தின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து அவருடைய குடும்பத்தினர் கூறுகையில், திருமண ஊர்வலம் தாமதமாக துவங்கியது எனவும் மேலும் டிஜே (DJ ) ஒளி அதிகமாக இருந்ததால் அசாதாரணமாக உணர்ந்த கணேஷ் மயங்கி விழுந்து உயிர் இழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.