Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணமான 3 மாதத்தில்… எலி மருந்தை குடித்த மனைவி… குடும்பத்தினர் சோகம்..!!

புதிதாக திருமணமான பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே இருக்கும் கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் தான் நாகராஜ் 28 வயதுடைய இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த இளைஞருக்கும், மஞ்சம்பட்டியைச் சேர்ந்த 24 வயதுடைய உமா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தன்னுடைய சொந்த ஊரிலிருந்த நாகராஜ் மீண்டும் பணியில் சேர்வதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் கோவை கிளம்பியுள்ளார். கிளம்புவதற்கு முன் மனைவி உமாவை மஞ்சம்பட்டியில் உள்ள அவரது அம்மா வீட்டில் விட்டு விட்டுச்சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் மிகவும் சோர்வாக இருந்த உமா, எலி மருந்தை சாப்பிட்டதாக  சொல்லப்படுகிறது.

இதையறியாத அவரின் பெற்றோர், சோர்வாகயிருந்த உமாவை மணப்பாறை – மதுரை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து நேற்று மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உமா பரிதாபமாக இற.ந்தார்.

இதையடுத்து பெண்ணின் பெற்றோர்கள் தன்னுடைய மகள் இறப்பிற்கு, நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம் என்றும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் மணப்பாறை போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளனர்.. புகாரினடிப்படையில் ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபிஆதித்யா விசாரணை நடத்தி நடத்தி வருகிறார்..

Categories

Tech |