இந்தி திரையுலகின் பிரபல நடிகராக இருந்தவர் ராஜீவ் கபூர். இவர் கடுமையான நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். பல திரையுலக ஜாம்பவான்களான ரிஷி கபூர் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோரின் சகோதரர் ஆவார். அவருடைய திடீர் மரணம் திரையுலகினர் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ரிஷிகபூர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவர் இறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் ராஜீவ் கபூர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் நடிகை குஷ்பூ, என்னுடைய இனிய நண்பரின் மரணம் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இவ்வளவு சீக்கிரம் அவருக்கு மரணம் வரும் என்று நினைக்கவில்லை என்று ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.