Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் துயரம்…! 1½ மாத குழந்தை கொரோனாவுக்கு பலி …!!

டெல்லியில் கொரோனா தொற்றினால் ஒன்றரை வயது குழந்தை பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு தீவிர சுவாச பிரச்சினையின் காரணமாக அவதிப்பட்டு வந்த ஒன்றரை மாத குழந்தை சிகிச்சைக்காக டெல்லியில் இருக்கும் ஹார்டின் மருத்துவமனையுடன் சேர்ந்த கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

மருத்துவமனையில் குழந்தைக்கு செய்த பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியான பின்னர் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. டெல்லியில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பச்சிளம் குழந்தை மரணம் அடைந்தது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

Categories

Tech |