Categories
உலக செய்திகள்

BREAKING : காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு – பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு..!!

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது..

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தலிபான்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.. அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கப்படைகளும் போரிட்டு வந்தனர்.. இந்த சூழலில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்தார்.. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் தலிபான்கள் கைப்பற்றி வந்த சூழ் நிலையில் நேற்று காபூல் நகரத்தையும் அவர்கள் கைப்பற்றினர்..

குடியரசுத் தலைவரான அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.. அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தலிபான் அமைப்புகள் அதிகார்வப்பூர்வமாக தெரிவித்தனர்.. இதற்கிடையே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் விமானம் மூலம் வெளியேறிக் கொண்டு இருந்தார்கள்.. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய நாட்டைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றி கொண்டிருந்தனர்..  இந்தியா நேற்று அனுப்பிய விமானம் மூலம் 129 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்..

இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.. ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.. துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பாதுகாப்பு படையினர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தை கலைப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின..

Categories

Tech |