Categories
உலக செய்திகள்

ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,685 ஆக உயர்வு!

ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,685 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது.  இதுவரை 3,08, 231 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 13,067 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் இதுவரை 95, 797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சீனா தற்போது கட்டுப்படுத்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், கடந்த சில நாட்களாக சீனாவில் யாருமே இறக்கவில்லை. நேற்றும் அதேநிலையில் தான் சீனாவில் இருக்கிறது..

ஆனால் தற்போது சீனாவை விட இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஈரானில் 1, 556 பேர் பலியாகியிருந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரேநாளில் 129 பேர் உயிரிழந்ததையடுத்து, ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 1,685 ஆக அதிகரித்துள்ளது. மேலும்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,638 ஆக அதிகரித்ததுடன், 7913 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இத்தாலியில் அதிகபட்சமாக 4, 825 பேரும், சீனாவில் 3, 261 பேரும், ஸ்பெயினில்  1,378 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |