உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 3100 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரசால் இதுவரை 3100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரசால் மொத்தம் 90,000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது மிக வேகமாக அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகின்றது. இதன் காரணமாக அந்நாடு பல சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதில் வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியா ஆகிய மாநிலங்கள் கொரோனவால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்காவில் மட்டும் 100க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதோடு மட்டுமில்லாமல் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேசமயம் கொரோனா வைரஸ் தொற்று மிக தீவிரமாக பரவி வருவதால் அதனை தடுப்பதற்கு ஒவ்வொரு நாடுகளும் முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றன. அதேபோல சீனாவுக்கு அடுத்த படியாக கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள சீனா, தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கான விமான போக்குவரத்தை சில நாடுகள் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது